நடிகை அனுஷ்கா கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி  நடிகை.இவர் தமிழ் ,தெலுங்கு  மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் “பாகமதி’ படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.அதாவது இவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டதால் அந்த படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது.

தற்போது மீன்டும் அவர் உடல் எடையை குறைத்து கொண்டு ” நிசப்தம் ” எனும் படத்தில் நடித்து வருகிறாராம்.இந்த படத்தில் நடிகர் மாதவன் ,அஞ்சலி மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கிறார்களாம்.

கிரைம் திரில்லர் படமாக இந்த படம் உருவாகி வருகிறதாம்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.