கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் “பரியேறும் பெருமாள்”.இந்த படத்தில் நாயகனாக நடித்தவர் கதிர்.இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார்.இந்த படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்திருந்தார்.

மேலும் இந்த படம் தேசிய விருதிற்கு பரிந்துரைக்கபடும் என்று எதிர்பார்க்க பட்டது. ஆனால் இந்த படத்திற்கு என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் தேசிய விருதிற்கு பரிந்துரைக்க பட்ட பட்டியலில் இந்த படம் இடம் பெறவில்லையாம். இது பலருக்கும் மிக பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் தற்போது பாண்டிச்சேரி அரசால் 2018 ஆம் ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்து சுவாமி சங்கரதாஸ் விருதை வழங்கியுள்ளது.