தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர் தான் ராஜா ராணி. இந்த தொடரில் நடித்திருந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா ஆகிய இருவரும் பட வாழ்க்கையில் காதலர்களாக இருந்து திருமணம் செய்துகொண்டனர். நாம் இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாக தான் இருந்து வருகின்றனர் என நினைத்தோம்.

இருவரும் தாங்கள் திருமணம் செய்துகொள்ள போவதையும், காதலிப்பதையும் ஒத்துக்கொண்டாலும், திருமணம் எப்போது எனும் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. இதனால், அனைவரும் இதை எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் இன்று சஞ்சீவ் ஒரு போஸ்ட் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, ஆமாம், நாங்கள் பாப்புவின் பிறந்த நாள் அன்றே திருமணம் செய்துகொண்டோம். ஆனால் சில சிக்கல்களால் இதை அறிவிக்கவில்லை. (Yes we got married on papu’s birthday itself…we dint announce cus of some issues it’s an official announcement now…need all your blessings)எங்களுக்கு உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த போஸ்ட்,