நடிகர் தனுஷ்  கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் முக்கிய நடிகர்.இவர் நடிப்பில் தற்போது “அசுரன்” படம் விரைவில் வெளியாக இருக்கிறது.இந்நிலையில் இவர் அடுத்ததாக பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை  ஐஸ்வர்யா லட்ஷமி நடிக்கிறார்.அந்த படம் பெரும் பகுதி லண்டனில் உருவாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு “உலகம் சுற்றும் வாலிபன்” எனும் தலைப்பை வைக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்திற்கு எம் ஜிம் ஆரின் படத்தலைப்பை வைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளதாம்.இது குறித்து தயாரிப்பாளர் சாய் நாகராஜன் கூறுகையில், எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் தலைப்பை டிஜிட்டலில் உருவாக்க இருக்கிறோம்.இந்த படத்தின் உரிமம் என்னிடம் தான் இருக்கிறது என்றும் இந்த படத்தின் தலைப்பை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் இந்த படத்தின் தலைப்பு தனுஷ் படத்திற்கு கிடைப்பதில் சிக்கலை ஏற்பட்டுள்ளது.