நடிகர் சமுத்திரக்கனி பிரபலமான இந்திய நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தனது துல்லியமான நடிப்பு திறமையாலும், மக்களை கவரும் கதைகளை வடிவமைப்பதாலும் பிரபலமடைந்தவர். இவரது நடிப்பிலும், இவரது நண்பனாகிய இயக்குனர் அன்பழகன் இயக்கத்திலும் 2012 ஆம் ஆண்டு உருவாக்கிய படம் தான் “சாட்டை”.

பள்ளி கூடத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்டு வடிமைக்கப்பட்ட இந்த படத்தின் அளவுக்கு அதிகமான வெற்றியை கண்ட சாட்டை பட குழுவினருக்கும், சமுத்திரக்கனிக்கும் அடுத்ததாக கல்லூரியை கொண்ட படம் தயாரிக்க வேண்டும் என்பது ஆசை. அதே போல தற்போது சாட்டை-2 படம் தயாரித்து, நடித்துக்கொண்டுள்ளார்.

சாட்டை-1 படத்தின் இயக்குனர் அன்பழகன் தான், சாட்டை-2 படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தை வருகின்ற “செப்டம்பர் 5” ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று வெளியிடப்போவதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.