பிரபாஸ் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.இவர் நடிப்பில் பாகுபலி திரைப்படம் வெளி வந்து மாபெரும் சாதனை படைத்து வசூல் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இவர் அடுத்ததாக இவர் சுஜித் இயக்கத்தில் சஹோ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார்.

இந்த படம் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

இந்த ட்ரெய்லர் வெளியான 24  மணி நேரத்தில் யு டியூப்பில் சுமார் 50 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.இந்த படம் வரும் ஆகஸ்ட் 30 ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.