நடிகர் கமலஹாசன் அவர்களின் தயாரிப்பில், பிரபல தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். ஆனால், வாரம் ஒருமுறை நடைபெறும் நாமினேஷனில், 7 பேர் வெளியேறியது போக  தற்போது, கஸ்தூரியுடன் சேர்த்து 10 பேர் உள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் உள்ளவர்கள்: 1. அபிராமி, 2. கவின், 3.மதுமிதா, 4.லொஸ்லியா, 5.முகன் ஆகியோர். இந்த வாரம் வீட்டிட்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில், முகன் தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளார். 5 பேர் முகனை வாக்களித்துள்ளனர். மக்களின் வாக்குகளை கொண்டு தான் வெளியேறுபவரை உறுதி செய்ய முடியும்.