நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான என்.ஜி.கே படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது “காப்பான்” படம் உருவாகி ரிலீஸிற்கு ரெடியாகி விட்டது. இந்நிலையில் சூர்யா அடுத்தாக இயக்குநர் சிவா இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதையடுத்து நடிகர் சூர்யாவிற்கு வேல் ,ஆறு ,சிங்கம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் ஹரியின் அடுத்த படத்தில் இவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.